ஊற்றப்பட வேண்டுமே உன்னதத்தின் ஆவி - Ootrapada Vendume Unnathathin aavi

ஊற்றப்பட வேண்டுமே உன்னதத்தின் ஆவி

உயிர்ப்பிக்க வேண்டும் எம்மை தேவா முன்மாரியாக அன்று பொழிந்திட்ட ஆவியை பின்மாரியாக இன்று பொழிந்திடுமே

எண்ணெய் அபிஷேகமே

என் தலையை நனைக்க

ஆவியால் நிரப்புமே

பாத்திரம் வழிந்தோடும்

நீச்சல் ஆழம் மூழ்கியே

நேசர் அன்பில் மகிழ

அக்கினி அபிஷேகம்

எந்தன் ஆவல் தீர்த்திடும்

தேவ மைந்தன் இயேசுவை விசுவாசித்தோம் போதிக்கும் ஆவியாலே நிறைத்திடுமே

ஜெப வேண்டுதலிலே தரித்திருப்போம் ஜெகத்திலே சாட்சியாக எம்மை நிறுத்தும்

ஒருமனதோடு கூடி வந்துள்ளோம்

தேவ புத்திரர் என முத்திரை போடும்